முல்லை பெரியாறு அணையில் மூழ்கும் கூடங்குளம் பிரச்சனை : கருப்புப்பன பிரச்சனை ,கூடங்குளத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம்,கேரளாவில் நடக்கவுள்ள இடை தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் போன்றவற்றை கருத்தில் கொண்டு மக்களை திசை திருப்பவே முல்லை பெரியார் பிரச்சனை காங்கிரஸ் ஆல் பெரிதாக்கப்பட்டு வருகிறது .முல்லை பெரியார் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே நமது பிரதமர் கூடங்குளம் அணுவுலை விரைவில் செயல்படத்தொடங்கும் , இரண்டாவது உலை ஆறுமாதத்திற்கு பின் செயல்படத்தொடங்கும் . அதற்க்கு அடுத்தகட்டமாக மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் அணு உலை அமைக்கப்படும் என அடுக்கிகொண்டே போகிறார் .14000கோடி செலவழித்த ஒரு திட்டத்தை நிறுத்தி வைக்கமுடியாது என தெரிவிக்கிறார் .தண்ணீர் பெற தமிழகம் வக்கீல் க்கு வாதாட குடுத்த தொகை மட்டும் 1200கோடி .அந்த பிரச்சனையை பற்றி அவர் வாய் திறக்கவில்லை .
அறிவியல் என்றால் ஆபத்து இருக்க தான் செய்யும் .ஆபத்தை குறைத்து அறிவியலை பயன்படுத்த வேண்டும் என்பது பலரது வாதம் .கூடங்குளம் பிரச்சனைக்கு போராடுபவர்களை என்னமோ நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துபவர்கள் போல பார்க்கிறார்கள் ஒரு சிலர் .ஒரு சிலர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தோடு ஒப்பிடுகிறார்கள் .கல்பாக்கம் அணு மின் நிலையத்தோடு ஒப்பிடும்போது கூடங்குளம் நான்கு மடங்கு அதிக திறன் கொண்டது .ராஜஸ்தானிலும் ,மகாராஷ்டிரா விலும் அமைக்கபோகும் அணு மின் நிலையம் கூடங்குளத்தை விட அதிக திறன் கொண்டதாக இருக்கும் .இது வரை 20க்கும் மேற்பட்ட அணு உலைகள் இந்தியா வில் இருக்கிறது .இந்தியா வின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய கூடங்குளம் போல 100அணுமின் நிலையங்கள் தேவைப்படும் .கூடங்குளம் கதிர்வீச்சு அபாயம் .விபத்து அபாயம் இதை எல்லாம் பற்றி பல பதிவுகள் உள்ளன .நாம் மற்ற விஷயங்களை பார்ப்போம் .
வல்லரசாகப்போகிறதா இந்தியா ?:
இந்தியா முதலில் வளர்ந்து வரும் நாடா என்றால் கண்டிப்பாக இல்லை .இந்தியா ஏழை நாடு தான் .தனிநபர் சராசரி மாத வருமானம் 4200ரூபாய் க்கு கீழ் இருந்தால் அந்த நாடு ஏழை நாடு .இந்தியாவின் சராசரி தனிநபர் மாத வருமானம் 3900ரூபாய் தான் .தொழில் வளர்ச்சியில் (ஒரு சில தொழிலதிபர்கள் மட்டும் ) ஓரளவு வளர்ந்ததால் இந்தியா வளர்ந்து வரும் நாடாக அறிவிக்கப்பட்டது .இப்போது வல்லரசாக இந்தியா அதிக அளவில் அணு வை பயன்படுத்த தொடங்கியுள்ளது .வல்லரசுகளுக்கு இணையாக அதிக அளவில் அணுவை பயன்படுத்தினால் அந்த நாடு அணு வல்லரசாக அறிவிக்கப்படும் .அல்லது வேறு வழியில் வல்லரசாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் .அல்லது தனிநபர் ஆண்டு வருமானத்தை உயர்த்த வழி செய்ய வேண்டும் .இதை செய்வதை காட்டிலும் அணு வல்லரசாவது தான் எளிது .அதை தான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது .இதனால் நாட்டில் வாழும் ஏழை ,நடுத்தர வர்கத்தினர் வாழ்க்கை தரம் உயருமா என்றால் கண்டிப்பாக உயராது .இதே நிலையில் தான் நீடிக்கும் .பெயர் மட்டும் வல்லரசு .ஆனால் இந்தியா வின் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் குரல் உலக அளவில் இப்போது இருப்பதை விட பலமாக ஒலிக்கும் .அவர்களுக்கு மட்டும் அதிக பயன் ஏற்ப்படும் .
ஆஸ்திரேலியா பிரதமரின் கருத்து :
அணு மின் நிலையத்திற்கு தேவையான யுரேனியம் அதிக அளவில் கிடைக்கும் நாடு ஆஸ்திரேலியா .அங்கு இருந்து தான் இந்தியா விற்கு தேவையான யுரேனியம் பெற ஒப்பந்தம் போடப்பட்டது .இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா வின் மிரட்டலுக்கு பயந்து ஆஸ்திரேலியா போட்டதாகவும் .இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் க்கு இடையில் அணு ஆயுத போட்டியை விளைவிக்கும் என்றும் இதனால் பல பாதக சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார் .அமெரிக்கா வின் மிரட்டலுக்கு பயந்து எடுத்த இந்த முடிவு வெட்க்ககேடனாது என அவர் தெரிவித்துள்ளார் .இந்தியா விற்கு யுரேனியம் குடுக்க அமெரிக்கா ஏன் மிரட்டியுள்ளது என தெரியவில்லை .ஆஸ்திரேலியா பிரதமர் பேட்டி யின் லிங்க்http://www.dinamalar.com/News_Detail.asp?Id=366426 .பாகிஸ்தானின் அணு சக்தி பற்றிய லிங்க்http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_Pakistan .
அமெரிக்கா ராஜதந்திரம் செய்தால் :
இப்போது பல பிரச்னையில் மக்கள் ஒத்துழைக்காததை கண்டு அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்ப மத்திய அரசு கையாண்ட ராஜ தந்திரம் தான் முல்லை பெரியார் பிரச்சனை .இதே போல பின்னாளில் அமெரிக்கா வின் ஏதாவது ஒரு முடிவை இந்தியா ஆதரிக்க மறுத்து அண்டை நாடுகளை அது தூண்டிவிட்டால் என்ன நடக்கும் ???.காலம் காலமாக வல்லரசுகள் செய்வது ஒரு வேலையே தான் .இரு நாட்டிற்கு இடையிலோ அல்லது உள்நாட்டிலோ இரு தரப்பினர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்ப்படும் போது அதில் பொருளாதரத்தில் பின்தங்கிய தரப்புக்கு ஒரு வல்லரசு இலவசமாக ஓரளவு உயர்தர ஆயுதங்களை வழங்கும் .இதன் மூலம் அந்த இரு தரப்பிற்கும் இடையே சண்டையை வளர்க்கும் .இதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு பலம் உள்ள மற்றொரு தரப்பு தானாக முன்வந்து வல்லரசுகளிடம் அதிக அளவு ஆயுதங்களை வாங்கும் .இதன் மூலம் வல்லரசுகள் தங்கள் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் .சண்டையின் முடிவில் கடைசி நிமிடத்தில் வரும் காவல் துறை போல ,யார் நீண்டகால அடிமையாக இருப்பார்கள் என வல்லரசு நாடுகள் நினைக்குதோ அவர்களுக்கு ஆதரவாக NATOபடை வந்து போரை முடித்து வைக்கும் .இதை தான் அமெரிக்கா நீண்டகாலமாக செய்கிறது .இதையே இந்தியாவிற்கும் செய்தால் ???.அப்படி எல்லாம் செய்யமாட்டார்கள் என சொல்லமுடியாது .மத்திய அரசு தன் சொந்த மக்களின் கவதை திசை திருப்பவே இன்னொரு பிரச்சனையை தூண்டிவிடும்போது அமெரிக்கா அடுத்த நாடு தானே அதுவும் இது போன்ற ராஜதந்திரத்தை கண்டிப்பாக செய்யலாம் .
அணு ஆயுதத்தின் விளைவுகள் :
முதலும் கடைசியுமாக பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு அமெரிக்கா வால் ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டு தான் .ஜப்பான் அமெரிக்கா வின் பியர்ல் ஹார்பர் மீது தாக்குதல் நடத்தியது .அதற்க்கு பதில் தாக்குதல் தான் ஹிரோஷிமா ,நாஹசாகியில் வீசப்பட்ட 2அணுகுண்டு .Smallboyஎன்ற எடை குறைவான அணுகுண்டு முதலில் வீசப்பட்டது Fatmanஎன்ற 64கிலோ எடை கொண்ட மற்றொரு குண்டு இரண்டாவதாக வீசப்பட்டது .இது எத்தகைய வளைவுகளை ஏற்ப்படுதபோகிறது என்பது அப்போதைய அமெரிக்கா அதிபருக்கும் தெரியாது .இதை வீசிய விமானிக்கும் தெரியாது .முடிவு இன்று நம்மில் பலருக்கு தெரியும் .உண்மையில் அணுகுண்டு வெடிப்பின் போது அது 7அலைகளை உருவாக்கும் .ஒரு குளத்தில் நாம் கல் எரியும் போது ஏற்ப்படும் அலைகளை போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் .முதல் மூன்று அலைகளுக்குள் வருபவர்கள் பெரும்பாலும் இறந்து ஆவியாகிவிடுவார்கள் .நான்காவது அலைகளில் வரும் நீர்நிலைகள் கொப்புளங்கள் வரும் அளவு கொதிக்கும் .ஐந்தாவது அலைகளில் இருப்பவர்கள் ஆடை தீப்பற்றி எரியும் .ஆறாவது அலையில் இருப்பவர்கள் முதுகில் சம்மட்டி அடி விழுந்தது போல இருக்கும் .ஏழாவது அலையில் இருப்பவர்கள் கதிர்வீச்சு அபாயத்திற்கு உட்படுவார்கள் இது தான் அணு குண்டின் விளைவு .இதன் தாக்கம் அவ்வளவு தொலைவு இருக்கும் என்பது அதில் பயன்படுத்தும் யுரேனியத்தின் எடையை பொருத்தது .தேவையா இவ்வளவு ஆபத்தான தொழில்நுட்பம் ???வேறு வழி இல்லை என்றாலும் பரவாஇல்லை .இப்படி எல்லாம் அணு ஆயுதப்போட்டி நடக்காது .உண்மையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதத்தை தயார் செய்ய கூடாது என சிலர் நினைக்கலாம் .எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் இதைப்பற்றி சிந்திக்கும் போது நாமும் சிந்தித்து தான் ஆக வேண்டும் .
நாம் என்ன பேசினாலும் சரி என்ன செய்தாலும் சரி மத்திய அரசு இதை செயல்படுத்தியே தீரும் என்று தான் தெரிகிறது .என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் .
No comments:
Post a Comment